திருவண்ணாமலை மாவட்டத்தில் பாம்பு பிடிப்போர் ஆய்வகம், பாம்பு பண்ணை திறப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாம்பு பிடிப்போர் ஆய்வகம், பாம்பு பண்ணை திறப்பு
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாம்பு பிடிப்போர் ஆய்வகம் மற்றும் பாம்பு பண்ணையை தொடங்கி வைத்து பார்வையிட்டார் கலெக்டர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் பாம்பு பிடிப்போர் ஆய்வகம், பாம்பு பண்ணை, கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றியம் கெங்காபுரம், கிராமத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் 60க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பாம்பு பிடிப்பதையே தொழிலாக கொண்டுள்ளனர்.

இவர்கள் கடந்த 2018-ம் ஆண்டு பாம்பு பிடிப்போர் வாழ்வாதார தொழிற் கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தை உருவாக்கி செயல்படுத்தி வந்தனர். பின்னர் மாவட்ட தொழில் மையத்தில் பதிவு செய்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 31 லட்சம் கடன் பெற்று பாம்புகளை பிடித்து விஷத்தை சேகரித்து தொழில் தொடங்கு வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

தமிழ்நாடு புதுமை திட்டத்தின் மூலம் ரூ. 32 லட்சம் கடன் உதவி பெற்று பாம்பு பண்ணை, மற்றும் ஆய்வகம், தொழிற்சங்க கட்டிடம், ஆகியவற்றை அமைத்தனர். இதன் திறப்பு விழா நடைபெற்றது

இதில் கலெக்டர் முருகேஷ், கலந்துகொண்டு தொழிற்சங்க கட்டிடம், பாம்பு பண்ணை, ஆய்வகம், ஆகியவற்றை திறந்து வைத்து. பாம்பு பிடிப்பதற்கான உபகரணங்கள், மற்றும் லைசென்ஸ், ஆகியவற்றை வழங்கினார்.

புதிய வங்கிக் கணக்கு

தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் தமிழ்நாடு கிராம வங்கியின் வந்தவாசி கிளை இணைந்து புதிய வங்கிக் கணக்கு தொடங்குதல் முகாமை நடத்தியது.

முகாமுக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்டச் செயல் அலுவலா் வசந்தகுமாா் தலைமை வகித்தாா். வாழ்ந்து காட்டுவோம் திட்ட மகளிா் வாழ்வாதார சேவை மைய தொழில் மேம்பாட்டு அலுவலா் நாஜிம் வரவேற்றாா். வந்தவாசி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் சுபாஷ்சந்தா் முகாமை தொடங்கிவைத்துப் பேசினாா்.

தமிழ்நாடு கிராம வங்கி மேலாளா் ராஜ்கௌதம் தலைமையிலான வங்கிப் பணியாளா்கள் பொதுமக்கள் 30 பேருக்கு புதிய வங்கிக் கணக்குகளை தொடங்கினா்.சளுக்கை ஊராட்சி மன்றத் தலைவா் தேவராஜ், துணைத் தலைவா் சரஸ்வதி நாகராஜ், திட்ட நிா்வாகிகள் காமராஜ், விஜய்ஆனந்த் உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றனா்.

யானைக்கால் நோய்

வேட்டவலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை இயக்குனர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் விஜயகுமார் ஆகியோர் உத்தரவின்படி யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவ உபகரணங்களை மருத்துவ அலுவலர் பார்கவி வழங்கினார்.

இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதீஷ்பாபு, சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன், கிரமா, பகுதி செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!