/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய வயல் விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் விவசாய வயல் விழா உள்பட முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய வயல் விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள்
X

கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற விவசாய வயல் விழா 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் விவசாய வயல் விழா நடைபெற்றது. மேலும் சில முக்கிய நிகழ்வுகளும் இங்கு பதிவிடப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் விவசாய வயல் விழா நடைபெற்றது. இதில் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் வந்தவாசி கோட்ட கரும்பு அலுவலர் வனிதா கலந்துகொண்டு பேசியதாவது:-

கரும்பு சாகுபடியில் தற்சமயம் நிலவும் வெட்டு ஆட்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கரும்பு அறுவடை எந்திரங்கள்தான். செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் 6 கரும்பு அறுவடை எந்திரங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

கரும்பு மகசூலை பொறுத்து ஆலை நிர்வாகமே வெட்டு கூலியை முடிவு செய்யும். ஆட்களை வைத்து கரும்பு வெட்டும் கூலியை ஒப்பிடும்போது அறுவடை எந்திரம் மூலம் கரும்பு வெட்டும் கூலி மிகவும் குறைவாகவே இருக்கும். எந்திரம் மூலம் வெட்டும் போது கரும்பு சோகைகள் தூளாக்கப்பட்டு நிலத்திலேயே மக்குவதால் மண்வளம் பெருகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், ஆலை கரும்பு உதவியாளர்கள் சேகர், அங்கமுத்து மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

வந்தவாசி

வந்தவாசி கூட்டுறவு ஊரக வளர்ச்சி வங்கியில் 12,597 பேருக்கு ஈவுத் தொகை வழங்கப்பட்டது

வந்தவாசியில், வந்தவாசி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் 89-வது பொதுப் பேரவைக் கூட்டம் தலைவர் பச்சையப்பன், துணைத்தலைவர் சீனுவாசன் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மண்டல இணைப்பதிவாளர் நடராஜன், செய்யாறு சரக துணைப்பதிவாளர் கமலக் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலாண்மை இயக்குநர் மூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். வங்கி செயலாளர் சீனுவாசன் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அங்கத்தினர்கள் 12 ஆயிரத்து 597 பேருக்கு 10 லட்சத்து 55 ஆயிரத்து 478 ரூபாய் ஈவுத் தொகைகளை வழங்கினார்.

இந்த பேரவை விழாவில், நகர்மன்ற தலைவர் லால், நகர தி.மு.க. செயலாளர் தயாளன், தெள்ளாறு ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் கமலாட்சி, மத்திய தொலைத் தொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் அண்ணாமலை, மற்றும் வங்கி பணியாளர்கள், சிறப்பு நிலை மேற் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, சிறப்புநிலை மேற்பார்வையாளர் காந்தி நன்றி கூறினார்.

விவசாயிகள் சுற்றுலா

வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்துக்கு விவசாயிகள் சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டனர்.

வந்தவாசி, ஆரணி, செய்யாறு உள்ளிட்ட வட்டாரங்களைச் சேர்ந்த 20 விவசாயிகள் ஆத்மா திட்டத்தின் சார்பில் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்துக்கு 5 நாள்கள் கண்டுணர்வு சுற்றுலா சென்றனர்.

வந்தவாசி வட்டார தொழில்நுட்ப மேலாளர் சிந்தாமணி தலைமையில் சென்ற அவர்களுக்கு கரும்பு பயிரை தாக்கும் நோய்கள், தேவையான ஊட்டச்சத்து, நீர் மேலாண்மை குறித்தும், கரும்பு பயிரில் துல்லிய பண்ணையம் குறித்து ஆராய்ச்சி நிலைய அலுவலர்கள் விளக்கி கூறினர்.

ஏற்பாடுகளை வந்தவாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாண்டி, வட்டார வேளாண்மை அலுவலர் விஜய்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 21 March 2023 11:40 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  3. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  4. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  5. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  6. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  8. ஈரோடு
    ஈரோடு: அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி...
  9. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  10. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு