பெரணமல்லூர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரூ.11.73 லட்சம் உண்டியல் காணிக்கை

பெரணமல்லூர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரூ.11.73 லட்சம் உண்டியல் காணிக்கை
X

கோவில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. 

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் 11.73 லட்சம் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த அவனியாபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. தக்ஷிண அகோபிலம் என அழைக்கப்படும், ஆவணியாபுரம் நரசிம்மர் கோயில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் தங்களது காணிக்கை செலுத்த 7 நிரந்தர உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று உதவி ஆணையர் ஜோதி லட்சுமி போது சரக ஆய்வாளர் ரவி கணேஷ் செயல் அலுவலர் பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 11 லட்சத்து 73 ஆயிரத்து 611 ரொக்கம், 579 கிராம் தங்கம், 78 கிராம் வெள்ளி ஆகியன காணிக்கையாக கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!