வந்தவாசி: உயர் மின் அழுத்தத்தால் மின்சாதனப் பொருட்கள் வெடித்தன

வந்தவாசி: உயர் மின் அழுத்தத்தால் மின்சாதனப் பொருட்கள் வெடித்தன
X
வந்தவாசியில் வீடுகளில் உயர் மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின; இதனால் பரபரப்பு நிலவியது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டவுன் கோட்டை பகுதி, மார்க்கெட் தெரு, அகழி தெரு, உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில், நேற்று மாலை திடீரென உயர் மின் அழுத்தம் ஏற்பட்டது. அப்போது 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, ஏ சி ,மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் வெடித்தன்.

இதில், ஒருசில வீடுகளில் முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டன. இதனை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். தகவலறிந்த மின் ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், எதனால் திடீரென உயர் மின் அழுத்தம் ஏற்பட்டது என்பது குறித்து மின்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!