/* */

வந்தவாசி அருகே பலத்த மழை: சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

வந்தவாசி அருகே சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் நெடுஞ்சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

வந்தவாசி அருகே  பலத்த மழை: சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு
X

நெடுஞ்சாலையில் விழுந்த மரம்.

வந்தவாசி மற்றும் சுற்றியுள்ள அம்மையப்பட்டு, சத்தியா நகர், மும்முனி, பாதிரி, வெண்குன்றம், சென்னாவரம், இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இந்த நிலையில் வந்தவாசி -திண்டிவனம் செல்லும் நெடுஞ்சாலையில் இளங்காடு கூட்டுச் சாலையில் பெரிய புளியமரம் ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் காவல் துறையினர் அந்த வழியாக செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதை வழியாக திருப்பி அனுப்பினர்.

மேலும் இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறை மற்றும் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் வந்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் மரத்தினை அப்புறப்படுத்தினர். இதனால் வந்தவாசி-திண்டிவனம் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கலசபாக்கம்:

கலசபாக்கம் அருகே ஆதமங்கலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா . இந்த நிலையில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் வசந்தா வீட்டின் ஒரு பக்க மண் சுவர் முழுவதும் இடிந்து விழுந்தது.

இதில் அதிர்ஷ்டவசமாக வசந்தா உயிர் தப்பினார். மேலும் இடிபாடுகளில் சிக்கிய அவர் கூச்சலிட்டார். உடனடியாக அவரது சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி வந்து வசந்தாவை மீட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் நேரில் சென்று மழையால் சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட வசந்தாவுக்கு தனது சொந்த பணத்தை நிவாரண உதவியாக வழங்கினார். மேலும் விரைவில் தமிழக அரசின் சார்பில் வீடு வழங்கப்படும். அதுவரை பத்திரமாக வேறு இடத்தில் தங்கிக் கொள்ளுமாறு ஆறுதல் கூறினார்.

அப்போது ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், தாசில்தார் ராஜராஜேஸ்வரி உள்பட அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் நேற்று மாலை வியாழக்கிழமை வரை அதிகபட்சமாக போளூரில் 88.20 மி.மீ. , பதிவானது.

இது தவிர, ஜமுனாமரத்தூரில் 5, ஆரணியில் 72.80, செய்யாற்றில் 83, வந்தவாசியில் 23, வெம்பாக்கத்தில் 15, சேத்துப்பட்டில் ஒரு மில்லி மீட்டா் மழை பதிவானது.

கமண்டல நாக நதியில் வெள்ளப்பெருக்கு

ஆரணி கமண்டல நாக நதியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் இரு கரைகளையும் தொடும் அளவுக்கு சென்றதால் பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

படவேடு அமிர்தி பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக நேற்று கமாண்டல நதியிலும் நாக நதியிலும் தண்ணீர் அதிக அளவில் சென்றது.

இந்த நிலையில் தொடர் மழை காரணமாக கமண்டல நாக நதியின் இரு கறைகளையும் தொடும் அளவுக்கு தண்ணீர் பாய்ந்து ஓடியது இதை ஆற்றுப் பாலத்தில் இருந்து பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

அப்போது காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் அங்கு நிற்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேம்பாலம் கட்ட வேண்டும் , பொதுமக்கள் கோரிக்கை

கண்ணமங்கலம் அருகே வாழியூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் சமீபத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அப்பகுதியில் உள்ள தரைப்பாலம் வழியாக அளவுக்கு அதிகமாக தண்ணீர் செல்கிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து வாழியூர் ஊராட்சியில் கிராமமக்கள் சார்பில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் மேம்பாலம் கட்ட எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே வாழியூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள தரைபாலத்தில் உடனடியாக மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 22 Sep 2023 2:19 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...