ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மோசடி நடப்பதாக விவசாயிகள் புகார்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மோசடி நடப்பதாக விவசாயிகள் புகார்
X
வந்தவாசி அருகே தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மோசடி நடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்

வந்தவாசி அருகே தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மோசடி நடப்பதாக விவசாயிகள்புகார் அளித்தனர். விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுக்கு பணம் தராமல் ரூ.54 லட்சத்தை சுருட்டியதாக நெல் வியாபாரி மீது புகார் அளிக்கப்பட்டது.

மோசடியை கண்டித்து விற்பனைக் கூட்டத்தின் வாயிற்கதவைப் பூட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போலீஸ் விசாரணையில் 5,081 நெல் மூட்டைகளுக்கு ரூ.53.71 லட்சம் மோசடி செய்தது அம்பலமாகியது. மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது

Tags

Next Story
ai future project