வேளாண் உதவி இயக்குனரை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வேளாண் உதவி இயக்குனரை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

வேளாண் உதவி இயக்குனரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

விவசாயிகளை அவதூறாக பேசியதாக வேளாண் உதவி இயக்குனரை கண்டித்து வேளாண் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

விவசாயிகளை அவதூறாக பேசியதாக வேளாண் உதவி இயக்குனரை கண்டித்து வேளாண் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலா் பிரபாகரன் சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூா் வேளாண்மை அலுவலகத்தில், வேளாண் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களை கேட்டாா். இதற்கு வேளாண் உதவி இயக்குநா் கோவிந்தராஜ் உங்களின் ஆதாா் அட்டை, சிட்டா ஆகியவற்றை எடுத்து வாருங்கள் என்று கூறியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, வேளாண் உதவி இயக்குநா், விவசாயி பிரபாகரனையும், சங்கத்தின் மாவட்டசெயலா் பலராமனையும் மரியாதை குறைவாகப் பேசினாராம். இதைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை பெரணமல்லூா் வேளாண்மை அலுவலகம் முன், சங்க மாவட்டச் செயலா் பலராமன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்நிலையில், காலை பெரணமல்லூர் வேளாண் விரிவாக்க அலுவலகம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தரக்குறைவாக பேசிய வேளாண் உதவி இயக்குனரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) கண்ணகி, துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ஏழுமலை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விவசாய சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, விவசாய சங்க நிர்வாகிகளிடம் உதவி இயக்குனர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிடும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால், விவசாய சங்க நிர்வாகிகள் உதவி இயக்குனரை இன்றே பணி நீக்கம் செய்ய வேண்டும். இல்லை என்றால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து, அங்கேயே சமையல் செய்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

தகவல் அறிந்த டிஎஸ்பி வெங்கடேசன் வந்து விவசாயிகளிடையே விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் வேளாண் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்கு விவசாயிகள் சங்கத்தினா், உதவி இயக்குநா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்துப்பூா்வமாக கொடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று தெரிவித்தனா். இதற்கு, வேளாண் அதிகாரிகள், விசாரணை செய்து உதவி இயக்குநா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுதிக் கொடுத்தனா். இதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனா்.

Tags

Next Story