திருட்டு போன மாடுகளை மீட்டுத் தரக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட வெண்மந்தை, எட்டிக்குட்டை, புன்னை, சூரியகுப்பம், ரங்கராஜபுரம், ஓசூர், மழவங்கரணை உள்பட பல்வேறு கிராமங்களில் கடந்த சில மாதங்களாக விவசாய நிலங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தன. இது தொடர்பாக சுமார் 60-க்கும் மேற்பட்ட மாடுகள் திருடு போனதாக 15-க்கும் மேற்பட்டோர் கீழ்க்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், எட்டிக்குட்டை கிராமத்தைச் சோந்த விவசாயிகள் ரமேஷ், ஜெயபால் ஆகியோரின் நிலங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த 2 பசு மாடுகள் மற்றும் ஒரு கன்றுக் குட்டியை செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து நேற்று அதிகாலை ரமேஷ், ஜெயபால் ஆகிய இருவருக்கும் தெரிய வரவே, இருவரும் காரில் சென்று தேடினா். அப்போது, இவா்களது மாடுகள் மற்றும் கன்றுக் குட்டியை அவலூா்பேட்டை சந்தையில் விற்பதற்காக மா்ம நபா்கள் மினிசரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில் செல்வது தெரிய வந்தது.
துகுறித்து இருவரும் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா், சேத்துப்பட்டு அருகே சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை மடக்கி மாடுகள் மற்றும் கன்றுக் குட்டியை மீட்டனா். அப்போது சரக்கு வாகனத்திலிருந்த கீழ்வில்லிவலம் கிராமத்தைச் சோந்த ஆறுமுகம் மகன் ஆனந்தன் தப்பியோடிவிட்டாா்.
இதைத் தொடா்ந்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த தென்வணக்கம்பாடி கிராமத்தைச் சோந்த பெருமாள் மகன் ஜோதி(32) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
இது குறித்து தகவலறிந்த ஏற்கனவே மாடுகள் திருடு போனதாக புகார் அளித்த விவசாயிகள் நேற்று மாலை கீழ்க்கொடுங்காலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது திருடு போன தங்களது மாடுகளையும் உடனடியாக கண்டுபிடித்துத் தருமாறு அவா்கள் கோரினா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், அவலூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மாட்டுச் சந்தை நடைபெறும் மதல்நாள் நள்ளிரவு மர்ம நபர்கள் மாடுகளை திருடுகின்றனர். திருடிய மாடுகளை வாகனத்தில் எடுத்துச் சென்று மாட்டுச் சந்தையில் விற்று விடுகின்றனர்.மாடுகள் திருட்டு போனது எங்களுக்கு காலை தெரிய வருவதற்குள் அவை வேறு ஒருவருக்கு விற்கப்பட்டு விடுகிறது. எனவே மாட்டுச் சந்தைகளை போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த விஷயத்தில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து எங்கள் மாடுகளை மீட்டுத் தர வேண்டும் என்றனர்.
பின்னா், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் சமரசம் செய்ததை அடுத்து விவசாயிகள் புறப்பட்டுச் சென்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu