வந்தவாசி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை

வந்தவாசி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை
X

பைல் படம்.

மனைவி கண்டித்ததால் மனமுடைந்த விவசாயி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த செம்பேடு கிராமம் செட்டியார் தெருவைச் சேர்ந்த கங்காதரனின் மகன் முருகன் (வயது 40), விவசாயி. இவருக்கு குடிப்பழக்கத்துக்கு ஆளான அவர், வீட்டில் வளர்த்து வந்த மாடுகளை விற்ற பணம் முழுவதையும்மது அருந்தி செலவழித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டுக்கு சென்ற அவரை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த முருகன் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். இதில் வீட்டிலே மயக்கமடைந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி அளித்த பின்னர், மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார்.

இதுகுறித்து தெள்ளார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!