வந்தவாசியில் இலவச தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

வந்தவாசியில் இலவச தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா
X

வந்தவாசியில் இலவச தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சீருடை மற்றும்  பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

வந்தவாசியில் இலவச தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சீருடை மற்றும் பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இலவச தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சீருடை பயிற்சி உபகரணங்களை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தரணிவேந்தன் தலைமை தாங்கி பயிற்சி முடித்த பெண்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் இலவச தையல் கலை பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு இலவச சீருடை பயிற்சி உபகரணங்கள் வழங்கும் விழா பீர்முகமது தலைமையில் நடைபெற்றது.

பயிற்சியில் பங்கேற்கும் 120 பெண்களுக்கு பயிற்சி உபகரணங்களை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தரணி வேந்தன் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில் தமிழக அரசு பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கைத்தொழிலான தையல் கலையை கற்றுத் தருவதற்காக இத்தகைய நிறுவனங்கள் மூலமாக பயிற்சி அளித்து வருகிறது. இந்த பயிற்சி பெறும் பெண்கள் யாரிடமும் ககைட்டி நிற்கவேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலேயே உட்கார்ந்து பெண்களுக்கு தேவயான ஜாக்கெட் மற்றும் சுடிதார் வைத்து கொடுப்பதன் மூலம் சுயதொழில் செய்யலாம். இதனை நன்றக விரிவு படுத்தினால் நீங்களே நாலு பெண் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கலாம். அத்தகயை சிறப்பு தையல் தொழிலுக்கு உண்டு. வீட்டில் இருந்து வேலை செய்ய முடியவில்லையா? கார்மெண்ட்ஸ் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தும் சம்பாதிக்கலாம். கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.பயிற்சியை பெற்றுள்ள நீங்கள் தொடர்ந்து இந்த தொழிலில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தில் உயர வேண்டும். தமிழகத்தில் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களைஅறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதனை நீங்கள் முறையான பயன்படுத்தி வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேற்றம் காண வேண்டும் . மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்குவதன் மூலம் பெண் தொழில் முனைவோரையும் உருவாக்கி வருகிறது என்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வந்தவாசி நகர மன்ற தலைவர் ஜலால் துணைத் தலைவர் அன்னை சீனிவாசன் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் நகர தி.மு.க. செயலாளர் தயாளன் மருத்துவர் கோகுல கிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் மதன் , ஒன்றிய தி.மு.க. உறுப்பினர்கள், வந்தவாசி வர்த்தக சங்க உறுப்பினர்கள், தையல் கலைஞர்கள், தொமுச உறுப்பினர்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க உறுப்பினர்கள்,வந்தவாசியில் இயங்கி வரும் தொண்டு நிறுவனங்களை சார்ந்த உறுப்பினர்கள் , பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிறைவாக இஸ்மாயில் நினைவு அறக்கட்டளை உறுப்பினர் பர்வீன் நன்றி கூறினார்..

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்