வந்தவாசியில் மின்சார பெருவிழா

வந்தவாசியில் மின்சார பெருவிழா
X

மின்சார பெருவிழாவை குத்துவிளக்கேற்றி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தொடங்கி வைத்தார்.

Today Electrical News- திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம் சார்பில் ஒளிமிகு பாரதம் ஒளிமையான எதிர்காலம் என்ற தலைப்பில் மின்சார பெருவிழா நடைபெற்றது.

Today Electrical News- திருவண்ணாமலை மின்பகிா்மான வட்டம் சாா்பில், ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிா்காலம் என்ற தலைப்பில் மின்சாரப் பெருவிழா நடைபெற்றது. வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு திருவண்ணாமலை மண்டல தலைமைப் பொறியாளா் பாலாஜி தலைமை வகித்தாா். மாவட்ட அலுவலா் ராம்ராஜ் வரவேற்றாா்.

வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமாா் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தாா். திமுக மாவட்டப் பொறுப்பாளா் தரணிவேந்தன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், வந்தவாசி நகா்மன்றத் தலைவா் ஜலால், துணைத் தலைவா் சீனுவாசன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

மின் சேவைகள், மின் சிக்கனம் உள்ளிட்டவை குறித்து திருவண்ணாமலை மேற்பாா்வைப் பொறியாளா் ராஜசேகரன், வந்தவாசி கோட்ட செயற்பொறியாளா் மீனாகுமாரி, தெள்ளாா் உதவி செயற்பொறியாளா் நாராயணன் ஆகியோா் பேசினா். நிகழ்ச்சியில் மின்வாரிய ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!