திமுக எம்எல்ஏவை கண்டித்து திமுகவினர் தீக்குளிக்க முயற்சி

திமுக எம்எல்ஏவை கண்டித்து திமுகவினர் தீக்குளிக்க முயற்சி
X

தங்கள் மீது மண்ணெண்ணெய்  ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற திமுகவினர்

வந்தவாசியில் தேர்தல் தோல்விக்கு தொகுதி எம்எல்ஏ தான் காரணம் என புகார் தெரிவித்த திமுகவினர் அவரை கண்டித்து தீக்குளிக்க முயன்றனர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வந்தவாசி நகராட்சி 2வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட காயத்ரி பிரபு, சுயேச்சை வேட்பாளர் ஷீலாவிடம் தோல்வியடைந்தார்.

இந்நிலையில் தங்களது தோல்விக்கு வந்தவாசி திமுக எம்எல்ஏ-வின் திரைமறைவு வேலைதான் காரணம் என புகார் கூறிய காயத்ரி பிரபு ஆதரவு திமுகவினர் மற்றும் விசிகவினர், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் மண்ணெண்ணெய் தங்கள் மீ து ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதைத்தொடர்ந்து அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களில் 3 பேரை பிடித்து போலீசார் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!