ஆரணி தொகுதியில் திமுகவினர் வெற்றி ஊர்வலம்!
கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தரணி வேந்தன் மற்றும் எ.வ.வே.கம்பன்,
ஆரணி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் எம்.எஸ். தரணிவேந்தன் வெற்றி பெற்றதையடுத்து, ஆரணி, வந்தவாசி, போளூர், சேத்துப்பட்டு நகரங்களில் உள்ள தலைவா்களின் சிலைகளுக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நடந்து முடிந்த ஆரணி மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை திமுக வடக்கு மாவட்ட செயலாளரான தரணிவேந்தன், அதிமுக சார்பில் கஜேந்திரன், பாமக வேட்பாளர் கணேஷ் குமார், நாம் தமிழர் கட்சி பாக்கியலட்சுமி ஆகியோர் களம் கண்டனர். இவா்கள் தவிர சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளைச் சோ்ந்த 25 போ் என மொத்தம் 29 போ் போட்டியிட்டனா்.
இதில் திமுக வேட்பாளா் எம்.எஸ். தரணிவேந்தன் 4,96,260 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன் 2,89,033 வாக்குகளும், பாமக வேட்பாளா் அ. கணேஷ்குமார் 2,33,930 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கு.பாக்கியலட்சுமி 65,964 வாக்குகளும் பெற்றனா்.
தற்போது வெற்றி பெற்றுள்ள தரணி வேந்தன் உள்ளாட்சித் தலைவர், இரண்டு முறை கூட்டுறவு சங்க தலைவராகவும், ஆறு முறை ஒன்றிய செயலாளராகவும், 7 வருடங்களில் மாவட்ட துணை செயலாளர், மாவட்ட பொருளாளர், தற்போது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர், என தொடங்கிய அவரது பயணம் தற்போது டெல்லி நாடாளுமன்றம் செல்லும் எம்பி வரை தொடர்கிறது.
மாவட்ட பொறுப்பில் நியமிக்கப்பட்டதிலிருந்து அமைச்சர் எ.வ.வேலுவின் தீவிர ஆதரவாளராகவும் அவரது மாவட்டத்தில் எதை செய்தாலும் அமைச்சர் வேலுவை கேட்டு தான் செய்வார் என்ற விசுவாசம் அவருக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தது என்கின்றனர் அப்பகுதி திமுகவினர்.
வெற்றி ஊர்வலம்
இந்நிலையில் ஆரணி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் எம்.எஸ். தரணிவேந்தன் வெற்றி பெற்றதையடுத்து, ஆரணி, வந்தவாசி, போளூர், செய்யாறு,சேத்துப்பட்டு நகரங்களில் உள்ள தலைவா்களின் சிலைகளுக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், தலைமையில் நடைபெற்ற வெற்றி ஊர்வலத்தில் கருணாநிதி சிலை,அம்பேத்கா் சிலை, அண்ணா சிலை, காந்தி சிலை, காமராஜா் சிலை, பெரியாா் சிலைகளுக்கு மாலை அணிவித்தாா்.
இந்நிகழ்வில் வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார், செய்யாறு எம் எல் ஏ ஜோதி, ஆரணி நகர மன்ற தலைவர் மணி ,காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரசாத், மதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், திமுக நிர்வாகிகள், தோழமைக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu