/* */

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு

பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு
X

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றியம் பெரிய கொழப்பலூர், கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 134 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலம் 1 முதல் 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு என்னும், எழுத்தும், என்ற திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்க வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதை பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், நேரில் சென்று எண்ணும், எழுத்தும், திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேள்வி கேட்டு மாணவர்களின் கற்றல் திறன் குறித்த ஆய்வு செய்தார்.

அப்போது 1 முதல் 5 வரை திருக்குறள் வாசித்த மாணவன், மற்றும் தூய்மை, சுகாதாரம், குறித்து கேள்வி கேட்கப்பட்டு இதில் சரியான பதில் அளித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 6 Sep 2022 10:50 AM GMT

Related News