வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

நியாய விலை கடையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

Tiruvannamalai District Collector- சேத்துப்பட்டு ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை ஆட்சியர் முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tiruvannamalai District Collector- திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கரைப்பூண்டி ஊராட்சியில் 15-வது நிதி குழு மூலம் பக்க கால்வாய் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கொம்மனந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.52 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டு பணிகளை தொடங்க உத்தரவிட்டார். சாராணப்பாளையம் அரசினர் உயர்நிலைப் பள்ளி சத்துணவு கூட்டத்துக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு பார்த்தார். மேலும் சத்துணவு சாப்பிடும் மாணவ -மாணவிகளிடம் உணவுகள் நல்ல முறையில் தயாரித்து வழங்குகிறார்களா என்று கேட்டறிந்தார்.

தொடர்ந்து வேளாண்மை விரிவாக்க மையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் உணவு கிடங்கு, ரேஷன் கடை ஆகியவற்றில் ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் கடையில் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, இருப்பு சரியாக உள்ளதா என பார்வையிட்டார்.

பின்னர் ஓதலவாடி கிராமத்தில் ரூ.21 லட்சம் செலவில் புதிய குளம் அமைக்கும் பணியை பார்வையிட்டு, குளத்தின் கரைமீது மரக்கன்றுகள் நட வலியுறுத்தினார். மேலும் தும்பூர் கிராமத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை பார்வையிட்டார்.

சாராணப்பாளையத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைக்கு சென்று மாணவர்களின் கல்வித் தரம் குறித்து மாணவர்களிடையே உரையாடி ஆய்வு செய்தார்.

பெரணமல்லூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் அருண் , உதவி இயக்குனர் ஊராட்சிகள் சுரேஷ்குமார், மாவட்ட ஊராட்சி செயலாளர் அறவழி, பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோ, சேத்துப்பட்டு ஒன்றியக் குழு தலைவர் ராணி அர்ஜுனன், சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகோபால், சத்தியமூர்த்தி, ஆரணி உதவி செயற்பொறியாளர் கோவிந்தன், அரசு துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது