வந்தவாசி அருகே வயல்களில் மேலாண்மை இயக்குனர் ஆய்வு
கரும்பு சோகை, பைல் படம்
கரும்பு சோகையை உரிப்பதால் பூச்சிகள் பயிரை தாக்காது. காற்றோட்டம் ஏற்பட்டு கரும்பு தடிமனாகும் என கரும்பு வயலில் ஆய்வு செய்த செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் காமாட்சி தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை தெள்ளார் கரும்பு கோட்டத்திற்குட்பட்ட கரும்பு வயல்களை வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் காமாட்சி திடீர் ஆய்வு செய்தார். அப்போது, சுந்தரம் என்பரது கரும்பு தோட்டத்தில் கரும்பு பயிரில் உள்ள சோகைகளை உரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். இதனை பார்வையிட்ட மேலாண்மை இயக்குனர் விவசாயியை பாராட்டினார்.
அப்போது அந்த விவசாயி. கடந்த ஆண்டு ஏக்கருக்கு 60 டன் ஆலைக்கு அனுப்பியதாகவும், வரும் பருவத்தில் கூடுதலாக அனுப்ப இப்பணியை மேற்கொள்வதாகவும் கூறினார்.
தொடர்ந்து, மேலாண்மை இயக்குனர் காமாட்சி விவசாயிகளிடம் கூறுகையில், கரும்பு சோகை உரிப்பதால் செதில் பூச்சி, சாறு உறிஞ்சி பூச்சி, மாவு பூச்சி, இடைக்கணுப்புழு ஆகியவை கரும்பு பயிரை தாக்காது. இதனால் கரும்பு பயிர்களுக்கு இடையே காற்றோட்டம் ஏற்பட்டு, கரும்பு தடிமனாவதுடன் அதிக சாறு கிடைக்கும். இதனால் 60ல் இருந்து 70 டன் வரை மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து மற்ற விவசாயிகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும் என கரும்பு தலைமை அலுவலர் சரவணனுக்கு உத்தரவிட்டார்.
அப்போது, தெள்ளார் கோட்ட கரும்பு அலுவலர் செந்தில்குமார். உதவியாளர்கள் லால்பகதூர், நாகராஜன், க ரு ம் பு உதவியாளர் வேலு, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலர்கள் , விவசாயிகள் மற்றும் பல ர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu