வந்தவாசி நகராட்சி: ஒரு கண்ணோட்டம்

வந்தவாசி நகராட்சி: ஒரு கண்ணோட்டம்
X

வந்தவாசி நகராட்சி அலுவலகம் 

கோரைப்பாய்க்கு புகழ்பெற்ற வந்தவாசி நகராட்சி

1886 ஆம் ஆண்டில் வந்தவாசி நகர பஞ்சாயத்து என்று அமைக்கப்பட்டது. 1942 ஆம் ஆண்டில், நகர பஞ்சாயத்து தேர்வு நகரமாக மேம்படுத்தப்பட்டது. இது 1942 ஆம் ஆண்டில், மூன்றாம் தர நகராட்சியாக 1994 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த நகராட்சி வந்தவாசி சட்டமன்றத் தொகுதி ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

வந்தவாசி நகரம் 1942 ஆம் ஆண்டு தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சிறப்பு நிலை பேரூராட்சியாக 1986 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது வந்தது. 1994 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 1998 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது.

வந்தவாசி தமிழ்நாட்டில் ஒரு சிறந்த இரண்டாம் நிலை நகராட்சியாகும். இந்த நகராட்சியில் மொத்தம் 22 வார்டுகள் உள்ளன

வந்தவாசியில் பல ஆண்டுகளாக கோரைப்பாய் உற்பத்தி நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் ஆற்றோரங்களில் விளைந்த மானாவாரி கோரைகளை அறுத்து, கைகளால் பாய் நெய்து வந்தனர். இந்த பாய்களை தெருத்தெருவாக தலையில் சுமந்து சென்று விற்பனை செய்தனர். பின்னர் 1979-ம் ஆண்டு கோரைப்பாய் தயாரிக்க இயந்திரம் வந்தவாசியில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து கோரைப்பாய் உற்பத்தி படிப்படியாக இயந்திரமயமாகியது. தற்போது வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மூலம் கோரைப்பாய் தயாரிக்கப்படுகிறது.

தற்போது எஸ். முஸ்தபா, நகராட்சி ஆணையாளராக பொறுப்பில் உள்ளார்

நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலில், இந்த நகராட்சி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்த வார்டுகள் 25

எஸ்சி வார்டு 3

எஸ்சி பெண்கள் வார்டுகள் 2, 24

பெண்கள் பொதுப்பிரிவு வார்டுகள் 1, 4, 5, 7, 8, 11, 12, 14, 16, 18

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?