/* */

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த அதிகாரி

வந்தவாசி அருகே கீழ்வெள்ளியூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புறக்கணித்து வெளியேறினார்

HIGHLIGHTS

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த அதிகாரி
X

 கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் நடைபெற்ற சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி,  சிறப்புரையாற்றினார்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தெள்ளார் ஒன்றியம் கீழ்வெள்ளியூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் திலகம் குப்புசாமி தலைமையில் நடந்தது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். கிராம சபை கூட்டத்தில் 8 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

கிராம பொதுமக்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் பல கேள்விகளை கேட்டனர். அதைப் பொருட்படுத்தாமல், தீர்மானங்கள் எழுதாமல், இடைவெளி விட்டு நோட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு, கிராம சபைக்கூட்டத்தை தொடர்ந்து நடத்தாமல் புறக்கணித்து விட்டு, அரை மணிநேரத்தில் அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதிகாரி சென்றதும் கிராம சபை கூட்டமும் முடிந்தது. அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காஞ்சி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு முறையான அழைப்பு விடுக்காததால் அவர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

கீழ்பென்னாத்தூர் தொகுதி சு.பொலக்குணம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து சிறப்புரையாற்றினார்

Updated On: 25 April 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’