ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கான டெங்கு விழிப்புணா்வுக் கூட்டம்

ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கான டெங்கு விழிப்புணா்வுக் கூட்டம்
X

ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கான டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வுக் கூட்டம்

வந்தவாசியில் ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கான டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கான டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் ந.ராஜன்பாபு தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதா், வட்டார மருத்துவ அலுவலா் ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை அடிக்கடி குளோரினேஷன் செய்ய வேண்டும், ஊராட்சிப் பகுதிகளில் தண்ணீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும், யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

டெங்கு கொசு உற்பத்தி ஆகும் இடங்கள், வீட்டைச்சுற்றி குப்பை கூளங்கள் போடுவதை அப்புறப்படுத்துவது, தேவையற்ற டயர்கள், தேங்காய் சிரட்டைகள், முட்டை ஓடு , தண்ணீர் தொட்டி ஆகியவற்றில் கொசுப்புழு வளர்ச்சியை தடுப்பதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

அவ்வப்போது தண்ணீர் சேகரிக்கும் பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் சேமிக்க வேண்டும், மூடி வைத்தல் அவசியம், போன்றவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் உயிரிழப்பு

செய்யாறு அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் உயிரிழந்தார்

செய்யாறு தாலுகா இருங்கள் கிராமத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரின் மகன் மோகன் தாஸ், அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி உடல் நலக்குறைவால் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் அதிகமாக இருந்ததால் மாணவனை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவ பரிசோதனையின்போது டெங்கு காய்ச்சல் உறுதியானது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மோகன்தாஸ் இறந்து விட்டார்.

தொடர்ந்து மோகன்தாஸ் படித்து வந்த செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு கிருமி நாசினி தெளித்து தீவிர சுகாதார பணி நடந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!