வந்தவாசி அருகே ஏரி உடைந்தது

வந்தவாசி அருகே ஏரி உடைந்தது
X

ஏரி உடைந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்த மழை நீர்

வந்தவாசி அருகே ஏரி உடைந்து, பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்தது. மழையின் காரணமாக பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது.

இதில் அதிகபட்சமாக வந்தவாசியில் 86 மிமீ மழையளவு பதிவாகியுள்ளது. மற்ற இடங்களில் பதிவாகி உள்ள மழையின் அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு

திருவண்ணாமலை- 52 மிமீ, சேத்துப்பட்டு- 28 மிமீ, செங்கம்- 25.8 மிமீ, கீழ்பெண்ணாத்தூர்- 20.8 மிமீ, கலசப்பாக்கம்- 14 மிமீ, போளூர்- 12.8 மிமீ, ஜமுனாமரத்தூர்- 8 மிமீ, ஆரணி- 7 மிமீ, தண்டராம்பட்டு- 5.6 மிமீ, செய்யாறு- 5 மிமீ, வெம்பாக்கம்- 3 மிமீ.

வந்தவாசியை அடுத்த நல்லூர் பழைய ஏரி, நல்லூர் புதிய ஏரி, கண்டையநல்லூர் ஏரிகள் நிரம்பி வெளியேறும் உபரிநீர் கடுவந்தாங்கல் ஏரிக்கு வரும். இந்த ஏரியின் கரைகள் பலமில்லாத நிலையில் தெற்கு பகுதியில் 2 இடங்களில் கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

வெறியேறிய நீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததில் 300 ஏக்கர் நிஅளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு ஆகியவை சேதமாகி உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தகவல் அறிந்த செய்யாறு கோட்டாட்சியர் விஜயராஜ் நேரில் பார்வையிட்டு உடனடியாக இதற்கான சிறப்பு பொறியாளர் மேற்பார்வையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Tags

Next Story
ai in future agriculture