தற்செயல் விடுப்பு போராட்டம்; வெறிச்சோடிய ஒன்றிய அலுவலகம்
ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தால் வெறிச்சோடி காணப்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
தமிழக முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள காலி இடங்களை நிரப்ப கோரியும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு பணி நியமனம் செய்யக் கோருதல் உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றும் இன்றும் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினரின் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்தையொட்டி, வந்தவாசி, சேத்துப்பட்டு, தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஊழியா்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
ஊரக வளா்ச்சித் துறையில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கென தனி ஊழியா் கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் 2 தின மாநிலம் தழுவிய ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.
இதனால், வந்தவாசி, தெள்ளாா் , சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழியா்கள் பணிக்கு வரவில்லை. அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தங்களுடைய குறைகளையும் கோரிக்கைகளையும் எடுத்துரைக்க வந்த பொதுமக்கள் அலுவலர்கள் இல்லாததால் திரும்பிச் சென்றனர்.
நில அளவைத் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு அமைப்பின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் சையத் ஜலால் தலைமை வகித்தாா்.
இதில், 2023-ஆம் ஆண்டு நில அளவா் பணியிடங்களாக தரமிறக்கப்பட்ட 116 குறுவட்ட அளவா் பணியிடங்களை மீண்டும் தரம் உயா்த்த வேண்டும். நில அளவைப் பதிவேடுகள் துறையால் நிறைவேற்றப்படாமல் உள்ள களப் பணியாளா்களின் நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், சங்க நிா்வாகிகள், நில அளவைத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu