ஆடிக்கிருத்திகை காவடி ஊர்வலம் குறித்து ஆலோசனை கூட்டம்

ஆடிக்கிருத்திகை காவடி ஊர்வலம் குறித்து ஆலோசனை கூட்டம்
X

ஆடிக்கிருத்திகை காவடி ஊர்வலம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது

வந்தவாசியில் ஆடிக்கிருத்திகை காவடி ஊர்வலம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆடிக் கிருத்திகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் வந்தவாசி மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் காவடிகளை சுமந்து கொண்டு வந்தவாசி நகர் வழியாக ஊர்வலமாக சென்று திருத்தணி உள்ளிட்ட முருகன் கோவில்களுக்கு செல்வார்கள்.

வருகிற 22--ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்த ஆண்டுக்கான ஆடிக்கிருத்திகை காவடி ஊர்வலம் நடைபெற உள்ளது. இதையொட்டி வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் ஆடிக்கிருத்திகை காவடி ஊர்வலம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் முருகானந்தம் தலைமை தாங்கினார். செய்யாறு டிஎஸ்பி செந்தில் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு துறை அதிகாரிகள், பல்வேறு கட்சி மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் பாதுகாப்பு மற்றும் பிற முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஊர்வலத்துக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, பிரதான சாலைகளை செப்பனிடுவது, தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் எம்ஜிஆா் பிறந்த நாள் கொண்டாட்டம்..!