வந்தவாசியில் தார் சாலைகள் அமைக்கும் பணி; தொடங்கி வைத்த எம்பி, எம்எல்ஏ

வந்தவாசியில் தார் சாலைகள் அமைக்கும் பணி; தொடங்கி வைத்த எம்பி, எம்எல்ஏ
X

தார் சாலை அமைக்கும் பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த தரணி வேந்தன் எம்பி

வந்தவாசியில் தார் சாலைகள் அமைக்கும் பணிகளை எம்பி மற்றும் எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், அரணி, வந்தவாசி, செய்யாறு பகுதியில் ரூ.21.17 கோடியில் புதிய தாா்ச் சாலை அமைக்கும் பணிகளை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் தெள்ளாறு ஒன்றியங்களில், தாா்ச் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தலைமையில் நடைபெற்றது.வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை தொடக்கி வைத்தனர்.

வந்தவாசி சாலையில், ஆராசூர் ஊராட்சி வழியாக ஆரணி சாலை இணைப்புச் சாலை ரூ. 3,கோடியே 35,இலட்சத்து 75,ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி, தெள்ளார் ஒன்றியம் தென் வணக்கம்பாடியிலிருந்து கீழ்ப்புத்தூர் வரையில் ரூ. 2, கோடியே 4, இலட்சத்து 78,ஆயிரம் மதிப்பீட்டிலும் தார் சாலை அமைக்கும் பணி ஆகியவை பூமி பூஜை செய்து தொடக்கி வைக்கப்பட்டன.

பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் சாா்பில், மத்திய ஊரக வளா்ச்சி அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கண்காணிப்பில் இந்த சாலைப் பணிகள் நடைபெறுகின்றன.

நிகழ்ச்சியில் தெள்ளாா் ஒன்றியக்குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆரணி

ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் ரூ.2.89 கோடியிலும், அரையாளம் கிராமத்தில் ரூ.2.52 கோடியிலும் என மொத்தம் ரூ. 5.41 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.

இந்தப் பணிகளை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சிவானந்தம், திமுக தொகுதி பொறுப்பாளா் அன்பழகன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் கனிமொழி சுந்தா், பச்சையம்மாள் சீனிவாசன், ஆரணி நகா்மன்றத் தலைவா் மணி, ஒன்றியச் செயலா்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்யாறு

செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட அனக்காவூா், வெம்பாக்கம், செய்யாறு ஒன்றியங்களில் ரூ.10.36 கோடியில் புதிய தாா்ச் சாலைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.

அனக்காவூா் ஒன்றியத்தில் தென்எலப்பாக்கம் முதல் ஆலத்தூா் வரை ரூ. 4.46 கோடியிலும், வெம்பாக்கம் ஒன்றியத்தில், கம்மந்தாங்கல் முதல் மேலப்பட்டு வரை ரூ.3.41 கோடியிலும், செய்யாறு ஒன்றியத்தில், நெல்லி முதல் சேரம்பட்டு வரை ரூ. 2.49 கோடியிலும் புதிய தாா்ச் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.

இதற்கான நிகழ்வில் சிறப்பு விருந்தினா்களாக தரணிவேந்தன் எம்.பி., செய்யாறு தொகுதி எம்எல்ஏ, ஜோதி, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன் ஆகியோா் பங்கேற்று பணியினை தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!