திருவண்ணாமலை மாவட்டத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருள்களை வழங்கும் அண்ணாதுரை எம்பி மற்றும் அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதிகளில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில், வந்தவாசி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னாவரத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், மருதாடு, கடைசிகுளம், கல்லாங்குத்து, வழூா், மும்முனி, கீழ்சாத்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோந்த 106 கா்ப்பிணிகளுக்கு புடவை, வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்கள், ஊட்டச்சத்து உணவு ஆகியவை வழங்கப்பட்டன.
விழாவுக்கு மாவட்ட திட்ட அலுவலா் கந்தன் தலைமை வகித்தாா். சென்னாவரம் ஊராட்சி மன்றத் தலைவா .வீரராகவன், மாவட்டக்குழு உறுப்பினா் தங்கம் மணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். வட்டார திட்ட அலுவலா் அபிராமி வரவேற்றாா்.
திமுக மாவட்டச் செயலா் தரணிவேந்தன் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடக்கி வைத்துப் பேசினாா்.
வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமாா் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கிப் பேசினாா். விழாவில் வந்தவாசி நகா்மன்றத் தலைவா் ஜலால், திமுக ஒன்றியச் செயலா்கள் பிரபு, பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செங்கம்:
செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காஞ்சி பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் தமிழக அரசின் சுகாதாரத் துறை சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
இதில் அண்ணாதுரை எம்.பி. கலந்து கொண்டு வளைகாப்பு விழாவை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்து 38 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன், ஒன்றியக் குழு உறுப்பினா் பவ்யா ஆறுமுகம், ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஜெயந்தி சீனு (காரப்பட்டு), சரஸ்வதிகோபால் (காஞ்சி), துணைத் தலைவா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu