திருவண்ணாமலை அருகே மோசவாடியில் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்

திருவண்ணாமலை அருகே மோசவாடியில் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்
X

சேத்துப்பட்டு அருகே கிராம சபை கூட்டம் நடைபெற்றது/

திருவண்ணாமலை மாவட்டம் மோசவாடி ஊராட்சியில் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த மோசவாடி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.

மோசவாடி ஊராட்சி மன்ற தலைவர் வைஜெயந்திமாலா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா முன்னிலை வகித்தார்.அனைவரையும் ஊராட்சி செயலாளர் ராஜசேகர் வரவேற்றார்.

கிராமசபை கூட்டத்தில் 2019&2020&ம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் ரூ.18 லட்சம் மதிப்பில் நடைபெற்ற கசிவு நீர் குட்டை, பசுமை வீடு, மாட்டுக்கொட்டகை அமைக்கும் பணி, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், அம்மா விளையாட்டு மைதானம், நல்ல தண்ணீர் குளம் படிக்கட்டு அமைத்தல் ஆகிய திட்டப்பணிகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்களின் புகைப்படம், வங்கி புத்தகங்கள் சரிபார்த்தல், வருகை பதிவேடுகள் நூறு நாள் பணியாளர்கள் சம்பள கணக்குகள் குறித்து வட்டார வளஅலுவலர் தமிழ்ச்செல்வி தலைமையில் தேவி, மாலா, அமிர்தம் ஆகிய குழுவினர் கடந்த 5 நாட்களாக சமூக தணிக்கை செய்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் ஊர் மூத்த குடி மக்கள் பொதுமக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பணித்தள பொறுப்பாளர் புனிதா, சூர்யா ஆகியோர் நன்றி கூறினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!