வந்தவாசி அருகே ஓட்டை விழுந்த ஏரி மதகு: அதிகாரிகள் சீரமைப்பு
ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் மதக்குகளை சீரமைத்த அதிகாரிகள்.
வந்தவாசியை அருகே ஏரி மதகு அருகே ஓட்டை ஏற்பட்டு சேதமடைந்ததால் சுமாா் 25 சதவீத ஏரி நீா் வெளியேறியது.
வந்தவாசி அருகே ஏரியில் மதகில் விழுந்த ஓட்டையால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது. 6 மணி நேர போராட்டத்துக்கு பின் தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டது.
தொடர் கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ் கொடுங்காலூர் கிராமத்தில் உள்ள பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீா் மூலம் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அண்மையில் பெய்த பலத்த மழையால் இந்த ஏரி நிரம்பியது.
இந்நிலையில் மதகு அருகே திடீரென ஓட்டை விழுந்தது. ஓட்டை சிறிது சிறிதாக பெரிதான நிலையில் ஏரியில் இருந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியியேறி விவசாய நிலம் வழியாக பாய்ந்தது.
தகவல் அறிந்து வந்த நீர்வளத்துறை அதிகாரிகள், கிராம மக்கள் உதவியுடன் ஓட்டையை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
3 ஜேசிபி இயந்திரம், லாரிகளின் உதவியோடு 300 க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீரை அடைக்கும் பணி இரவு முழுக்க நடைபெற்றது. 6 மணி நேரமாக போராடி ஏரியின் மதகு அருகே ஏற்பட்ட ஓட்டையில் இருந்து வெளியேறிய தண்ணீரை அடைத்தனர்.
6 மணி நேரத்தில் ஏரியின் 25 சதவீத தண்ணீர் வீணானதாகவும், மதகை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கீழ் கொடுங்காலூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu