வந்தவாசியில் மக்களுடன் முதல்வர் முகாம்..!

வந்தவாசியில் மக்களுடன் முதல்வர் முகாம்..!
X

பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய தரணி வேந்தன் எம்பி

வந்தவாசியில் மக்களுடன் முதல்வர் முகாம்,எம்பி எம்எல்ஏ பங்கேற்றனர்

வந்தவாசி அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் மக்களுடன் முதல்வர் முகாமை தொடக்கி வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்க்கொடுங் காலூரில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெயமணி ஆறுமுகம், வட்டாட்சியர் பொன்னு சாமி,வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா குமார் அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் முகாமை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகையில்,

எல்லாதரப்பு மக்களாலும் பாராட்டப்படும் ஆட்சியே தலைவர் ஸ்டாலின் ஆட்சி. இது மக்களுக்கான ஆட்சி. தமிழகத்தில் மக்களின் நலனுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன குறிப்பாக பெண்களுக்கு, இலவச பேருந்து திட்டம், புதுமைப்பெண் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது அதிகாரிகள் உங்களைத் தேடி வரும் திட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப் படுகிறது. 14 துறை அலுவலர்கள் மூலம் 44 சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இதற்காக பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.

இந்த திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.

சட்டமன்ற உறுப்பினர் அம்பேத் குமார் தனது தொடக்க உரையில்,

20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதியில் இந்த மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுகிறது. வந்தவாசி பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் முகாம்கள் இன்னும் 2 நாட்களில் முடிவடையும் தருவாயில் உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில்தான் கலைஞர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு,மகளிர் உரிமைத்தொகை, இல்லம் தேடிக் கல்வி, மக்களை தேடி மருத்துவம், புதுமைப்பெண், தவப் புதல்வன், மகளிர் இலவச பேருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.

அதைத்தொடர்ந்து மக்கள் அதிகாரிகளை தேடிச் செல்வதின் சிரமத்தை குறைப்பதற்காக, தமிழ்நாட்டு முதல் அமைச்சரால் கொண்டு வரப்பட்ட திட்டம் இது. கீழ்கொடுங்காலூர், சாத்தனூர், மருதாடு, கோவில் குப்பம், கல்லாங்குத்து உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்களுக்கான முகாமை அந்த பகுதி மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கோரிக்கை மனுக்களை பெறும் அதிகாரிகள் கனிவோடு பரிசீலித்து நியாயமான கோரிக்கைகளை 30 தினங்களுக்குள் முடித்துக் தரவேண்டும் என பேசினார்.

தொடர்ந்து, சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி, இலவச வீட்டு மனை, பட்டா மாற்றம் உள்ளிட்ட வருவாய்த்துறை சான்றுகளை பயனாளிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், தாசில்தார், ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசு அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil