சமூகநீதியை காக்க போராடும் முதல்வர்: செ.கு. தமிழரசன் பாராட்டு

சமூகநீதியை காக்க போராடும் முதல்வர்:  செ.கு. தமிழரசன் பாராட்டு
X

இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு. தமிழரசன்

சமூகநீதியை காக்க தமிழக முதல்வர் போராடி வருகிறார் என இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு. தமிழரசன் பாராட்டியுள்ளார்

வந்தவாசியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு. தமிழரசன் திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னை புளியந்தோப்பு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு தரமற்ற நிலையில் கட்டப்பட்டுள்ளது நாடே அறிந்துள்ளது. மாநிலம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் அனைத்து குடியிருப்புகளும் இதே நிலையில்தான் இருக்கும். அதனை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும்.

குடிசை வாசிகளுக்காக ஏற்படுத்தப்படும் அடுக்குமாடி குடியிருப்பை 5 மாடிகளுக்கு மேல் கட்டக் கூடாது. கோயில் நிலங்கள் மீட்பு விஷயத்தில் அரசு சிறப்பாக செயல்படுகிறது. சமூக நீதியை காக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்ட வடிவில் போராடி வருகிறார். அதில் எங்கும் தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்பில் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. அதனை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!