ஆரணியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

ஆரணியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
X

பயனாளிகளுக்கு நலவிட்ட உதவிகளை வழங்கிய தரணி வேந்தன் எம்பி

ஆரணியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் எம் பி பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட ம் ஆரணி அடுத்த முள்ளிப் பட்டு ஹவுசிங் போர்ட் மற்றும் மாமன்டூர் தனியார் திருமண மண்டபங்களில் முள்ளிப்பட்டு, மலையாம்பட்டு, அரையாளம், புதுப்பாளையம், சத்ப்பேரி பாளையம், காட்டேரி, லாடப்பாடி, மொழகம்பூண்டி, கணிகிளுப்பை, மாமண்டூர் உள்ளிட்ட ஊராட்சிகள் சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமிற்கு வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம் முன்னிலை வகித்தார். தொழிலாளர் திறன் மேம்பாட்டு வாரிய உறுப்பினர் அன்பழகன் தலைமைதாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் பங்கேற்றார். மேலும் வருவாய் துறை, மின்சார துறை, மருத்துவ துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை வேளாண்மை துறை காவல் துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட 17 துறைகள் சார்பாக 1076 கோரிக்கை மனுக்கள் பொது மக்களிடம் பெறப்பட்டு 586 மனுக்கள் ஏற்பு 490 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்பட்டன. மேலும் மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் மற்றும் வேளாண் துறை சார்பில் உரம் பூச்சிக்கொல்லி மருந்துகள் மண்வெட்டி உள்ளிட்ட பொருட்களை பயனாளிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் கூறுகையில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து மக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 70 சதவீதம் வரை உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அதிகாரிகள் தான் பெற்ற மனுக்கள் மீது உடனடி கவனம் செலுத்தி தீர்வு காண்பதே ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெண்கள் அதிக அளவில் பயனடைகின்றனர், இது மக்களுக்கான ஆட்சி என எம் பி பேசினார்.

இதில் மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி நகர மன்ற தலைவர் மணி மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி ஒன்றிய செயலாளர்கள் சுந்தர், துரைமாமது, மோகன் மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன் ,மாவட்ட பிரதிநிதி ரவி வட்டாட்சியர் கௌரி, வட்டார வ ள ர் ச் சி அலுவலர்கள் தசரதராமன் ,இராஜேஸ்வரி மற்றும் ஊராட்சி மன்றதலைவர்கள் ,துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா