தகுதிச்சான்று முடிந்த பின்னரும் இயங்கிய தனியார் பள்ளி பேருந்து பறிமுதல்

தகுதிச்சான்று முடிந்த பின்னரும் இயங்கிய தனியார் பள்ளி பேருந்து பறிமுதல்
X

செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனை 

வந்தவாசி பகுதியில் தகுதிச்சான்று முடிந்த பின்னரும் இயங்கிய தனியார் பள்ளியின் 2 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது

வந்தவாசி பகுதியில் செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

அப்போது அந்த வழியாக வந்த ஆராசூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியை சேர்ந்த இரண்டு பேருந்துகள் மாணவர்களை ஏற்றி வந்து கொண்டிருந்தது. அவற்றை நிறுத்தி சோதனையிட்டபோது வாகனங்களுக்கு வழங்கப்பட்ட தகுதிச்சான்று 2020-ம் ஆண்டே முடிந்தது தெரியவந்தது. அதன் பின்னரும் அநத வாகனங்களை இயக்கி உள்ளனர்.

இதையடுத்து பேருந்துகளை பறிமுதல் செய்து வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். அதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!