வந்தவாசியில் பெண்ணிடம் செயின் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

வந்தவாசியில் பெண்ணிடம் செயின் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
X

பைல் படம்.

வந்தவாசியில் மூன்று இடங்களில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வந்தவாசி பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் மனைவி கனிமொழி, இவர் இரவு காற்றுக்காக வீட்டை திறந்து வைத்துவிட்டு வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கனிமொழி அணிந்திருந்த 3 பவுன் தாலிச் சங்கிலியை திருடிச் சென்றனர்.

இதே போல வீட்டை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்த சென்னாபுரம் கிராமத்தை சேர்ந்த வடிவேலு, யுவராஜ் ஆகியோரது வீடுகளில் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 5 பவுன் நகையை திருடி சென்றுள்ளனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜானகிராமனின் வீட்டில் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றபோது அவர் சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். நேற்று நள்ளிரவில் மட்டும் மூன்று வீடுகளில் கைவரிசை காட்டிய மர்மநபர்களை வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா