இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய சமூக நலத்துறை அலுவலர் சரண்யா
வந்தவாசியில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் செயல்பட்டு வரும் வந்தவாசி முகம்மது இஸ்மாயில் நினைவு அறக்கட்டளை வழியாக தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நிறுவனர் ரகமத்துல்லா தலைமையில் நடைபெற்றது.
பயிற்றுநர் ஜான்சிராணி முன்னிலை வகித்தார். தாளாளர் ஆசியா பர்வின் அனைவரையும் வரவேற்றார், பெண்குழந்தைகளை காப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் 25 பெண்களுக்கு 45 நாட்களு க்கான இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சிக்கான சான்றி தழ்களை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட உதவி இயக்குநர் தியாகராஜன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரண்யா ஆகியோர் வழங்கினர். மாவட்ட துணை பயிற்சி அலுவலர் சாம்ராஜ் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை பயிற்சி அலுவலர்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கண் பரிசோதனை முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் சார்பில் நடைபெற்ற முகாமிற்கு கல்லூரி முதல்வர் ருக்மணி தலைமை வகித்தார்.
அரிமா சங்க நிர்வாகி சரவணன், முகாம் ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், முகாமை கல்லூரி செயலாளர் ரமணன் தொடங்கி வைத்தார்.
இம் முகாமில் ஆயிரம் மாணவிகளுக்கு கண் புரை, கண் அழுத்தம், கிட்ட பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட பரிசோதனைகள் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மேற்கொண்டனர், நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரி மேலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu