திருவண்ணாமலையில் ஊரக வேலைத் திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்

திருவண்ணாமலையில் ஊரக வேலைத் திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்
X

ஊரக வேலைத் திட்ட பணிகளை ஆய்வு செய்யும் மத்திய குழுவினர் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் ஊரக வேலைத் திட்ட பணிகளை மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, ஆரணி பகுதிகளில் நடைபெற்றுவரும் ஊரக வேலை திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். ஊரக வளர்ச்சித்துறை பொருளாதார ஆலோசகர் என் சீனிவாச ராவ் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.

வந்தவாசியை அடுத்த தெள்ளார் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னூர் மற்றும் மீச நல்லூர், ஊராட்சிகளில் ஊரக வேலை திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் குட்டை அமைத்தல், தடுப்பணை அமைக்க, மக்கும் மற்றும் மக்காத குப்பை தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தனர்.

மேலும் ஆரணியை அடுத்த சேவூர் ஏரியில் நடைபெற்று வரும் பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். சேவூர் கால்வாய் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் விளைச்சல் குறித்து கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின் போது மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதாப், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் அசோகன், உதவி திட்ட அலுவலர்கள் உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!