வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு
X

பைல் படம்.

Crime News in Tamil -வந்தவாசி அருகே வீட்டு பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

Crime News in Tamil -வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுலக்கண்ணன். இவரது மனைவி பரிமளாவுக்கு குழந்தை பிறந்துள்ளதால் உளுந்தை கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் அவர் தங்கியிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு கோகுல கண்ணன் வீட்டை பூட்டிவிட்டு மனைவி குழந்தையை பார்க்க உளுந்தை கிராமத்திற்கு சென்றார்.

பின்னர் நேற்று வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

வீட்டினுள் சென்று பார்த்தபோது இரண்டு பீரோக்களை உடைத்து அதிலிருந்து 20 பவுன் தங்க நகைகள் 300 கிராம் வெள்ளி பொருட்கள் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து கீழ் கொடுங்கலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் திடீர் மாயம்

மங்கலம் அருகே மர்மமான முறையில் காணாமல் போன கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் பகுதியில் பெரிய ஏரிக்கரை அருகே பாலானந்தல் கிராமத்துக்கு செல்லும் வழியில் கிராமத்துக்கு செல்லும் சாலையில் சாலை ஓரத்தில் இருசக்கர வாகனம் ஒன்று விழுந்து கிடந்துள்ளது. அதன் அருகே ரத்தக்கரையும் இருந்துள்ளது. செல்போன் ஒன்றும் இருந்துள்ளது. அதன் அருகே சாலையோரம் இருந்த வைக்கோல் போர் ஒன்றும் எரிந்து சாம்பலாகி இருந்தது.

அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள் உடனடியாக மங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த மங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நஸ்ருதீன் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் கீழே இருந்த இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை காவல்துறையினர் கைப்பற்றினர். பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் திருவண்ணாமலை அருகில் உள்ள பாலானந்தல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 33) என்பவருடையது என தெரியவந்தது. இவர் மீது கொலை வழக்கு ஒன்று உள்ளது என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் தேடியுள்ளனர். எங்கு தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னர் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அவருடைய மனைவியிடம் மேற்கொண்ட விசாரணையில் மணிகண்டன் நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்து சென்றதாகவும் பின்னர் வீடு திரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் காவல்துறையினர் தகவல் சேகரித்தனர். அவர் விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வரவில்லை என்பது தெரியவந்தது

மேலும் அவர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

காணாமல் போன மணிகண்டனுக்கு திருமணமாகி 6 மாத குழந்தை உள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!