வந்தவாசியில் கல்லாமை குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

வந்தவாசியில் கல்லாமை குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
X

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்லாமை குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்லாமை குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்லாமை குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாநில பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம், கற்போம் எழுதுவோம் இயக்கம், மாவட்ட கலை குழு ஆகியவை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.

தெள்ளாறு வட்டார வள மைய மேற்பார்வையாளர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கல்லாமையை இல்லாமல் ஆக்க வேண்டும். பள்ளி செல்லாமல் எழுத்தறிவின்றி உள்ள வயதுவந்தோர், எழுதப் படிக்க முயல வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து நாடகம் பாடல்கள் மூலம் கலைக்குழுவினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி உதவி தலைமை ஆசிரியர், மாவட்ட கலை குழு தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!