மின் சிக்கன வாரத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்

மின் சிக்கன வாரத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
X

விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த  கோட்ட செயற்பொறியாளர் மீனாகுமாரி

வந்தவாசியில் மின் சிக்கன வாரத்தையொட்டி தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழக வந்தவாசி கோட்டம் சார்பில் மின்சிக்கன வாரத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கோட்ட செயற்பொறியாளர் மீனாகுமாரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வந்தவாசி கோட்டை மைதானத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பழைய பேருந்து நிலையம், பஜார் வீதி ,தேரடி வழியாகச் சென்று ஐந்து கண் பாலம் அருகே முடிவடைந்தது.

விழிப்புணர்வு ஊர்வலத்தில் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சசிகுமார் ,உதவி பொறியாளர்கள் ,மின்வாரிய ஊழியர்கள், பொதுமக்களுக்கு மின்சிக்கனம் ,பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!