/* */

வந்தவாசி: பொதுத்தேர்வுகளில் தமிழில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு

வந்தவாசி வட்ட அளவில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தமிழில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

வந்தவாசி: பொதுத்தேர்வுகளில் தமிழில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு
X

வந்தவாசி வட்டார அளவில் அரசு பொது தேர்வில் தமிழில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தனியார் திருமண மண்டபத்தில் வந்தவாசி வட்டத் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் வந்தவாசியில் வட்டார அளவில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படித்து 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பொதுத்தேர்வில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.

விழாவுக்கு வட்டத் தமிழ்ச்சங்க தலைவர் சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் மயில்வாகனன் வரவேற்றார். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மங்கவரதாள், அரிமா சங்க தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தெள்ளார் வட்டார கல்வி அலுவலர் அரங்கநாதன் மாணவர்களை வாழ்த்தி பேசி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பரிசுகளை சங்க துணைத் தலைவர் பிச்சாண்டி வழங்கினார்.

விழாவில் வெங்கடேசன், துணைத் தலைவர் ஸ்ரீதர், கதிரொளி, பிரபாகரன், லோகநாதன், இராமஜெயம், அரங்க மோகன் உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் முருகவேல் நன்றி கூறினார். நிகழ்ச்சியை துணைத் தலைவர் மழையூர் தமிழரசன் தொகுத்து வழங்கினார்.

Updated On: 22 Aug 2022 11:00 AM GMT

Related News