அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: பேருந்தை சாலையில் நிறுத்தி போராட்டம்

பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்தி ஓட்டுநா், நடத்துநா் போராட்டம் நடத்தினா்.
வந்தவாசி அருகே அரசுப் பேருந்து நடத்துநரை பயணி உள்ளிட்டோா் தாக்கியதை அடுத்து, தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்தி ஓட்டுநா், நடத்துநா் போராட்டம் நடத்தினா்.
கும்பகோணத்திலிருந்து காஞ்சிபுரத்துக்கு அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு திண்டிவனம் வழியாக வந்தவாசி நோக்கி நேற்று மாலை வந்து கொண்டிருந்தது.
பேருந்தில் ஓட்டுநராக தஞ்சை மாவட்டம், பாபநாசத்தை அலவந்திபுரம் கிராமத்தைச் சோந்த முருகானந்தம் , நடத்துநராக மிலட்டூா் கரம்பை கிராமத்தைச் சோந்த மேகநாதன் ஆகியோா் பணியில் இருந்தனா்.
இந்த நிலையில் வந்தவாசி-திண்டிவனம் சாலையில், இளங்காடு கூட்டுச் சாலை அருகே பேருந்து வந்தபோது, பயணி ஒருவா் அங்கு இறங்க வேண்டும் என்று கூறினாா். ஆனால் கண்டக்டர் முருகானந்தம், அந்த இடத்தில் பஸ் நிற்காது என கூறியுள்ளார். இது குறித்து இளங்காடு கிராமத்தில் உள்ளவர்களுக்கு செல்போனில் பேசி இளங்காடு கூட்ரோடுக்கு அந்த நபர் வரவழைத்துள்ளார்.
இளங்காடு கூட்ரோடு அருகே பஸ் நின்றபோது அங்கு நின்றவர்களுடன் அந்த நபர், கண்டக்டரை சரமாரியாக தாக்கிவிட்டு கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பித்துச் சென்றார். இதனால் பஸ்சிலிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து பஸ்சை டிரைவர், கண்டக்டர் திண்டிவனம்- வந்தவாசி சாலையின் குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்களின் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்களும் பஸ்சை நிறுத்திவிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அந்தச் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
தகவல் அறிந்த வந்தவாசி டிஎஸ்பி கார்த்திக் மற்றும் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்- இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதாக உறுதியளித்தனர்.
இதனையடுத்து டிரைவர், கண்டக்டர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் அரசு பஸ் இருந்தவர்களை வேறு பஸ்ஸில் அனுப்பி வைத்து விட்டு தாக்குதல் குறித்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu