நாடாளுமன்றத்தில் தனது கன்னிப் பேச்சை துவக்கிய ஆரணி எம்பி
நாடாளுமன்றத்தில் பேசிய தரணி வேந்தன் எம்பி
நாடாளுமன்றத்தில் ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் தனது முதல் கன்னிப் பேச்சை தொடங்கி ஆரணி தொகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று தனது முதல் கன்னிப் பேச்சைதொடங்கிய தரணி வேந்தன் நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் பேசியதாவது,
கடந்த 2010 காங்கிரஸ் ஆட்சியில் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திண்டிவனம் முதல் நகரி வரை இரயில் பாதை திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. மேலும் தமிழக அரசின் சார்பாக 198 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு நிலங்கள் கையகப் படுத்தப்பட்டது. ஆனால் கடந்த 14 ஆண்டுகள் ஆகியும் அந்த திட்டங்கள் செயல் படுத்தப்படவில்லை 7 இரயில்வே பாலங்கள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டு 20 விழுக்காடு வேலைகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. மேலும் இந்த திட்டத்தால் இரயில் பாதை வரும் என்று விவசாய நிலங்களை கொடுத்த விவசாயிகள் இரயிலும் வராததால் விவசாயம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளன.
இரயில் வரும் என்று விவசாய நிலங்களை கொடுத்த விவசாயிகள் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி போனதாக மேற்கோள் காட்டி இந்த இரயில்வே திட்ட பணி இத்தனை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பேசினார். மேலும் ஆரணி என்பது பட்டு நெசவும் அரிசி உற்பத்தியிலும் சிறந்து விளங்க கூடிய ஒரு பகுதி என்றும் பாமினி எக்ஸ்பிரஸ் இரயில்கள் , இராமேஸ்வரம் திருப்பதி, மன்னார்குடி திருப்பதி இரயில்கள் போளுர் வழியாக ஆரணியில் இரயில்கள் இப்பகுதியில் நின்று செல்ல வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இரயில்வே பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் தான் பங்கேற்ற முதல் பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே ஆரணி எம். பி.பேசியிருப்பது தொகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu