ஆட்சியர் தலைமையில் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

ஆட்சியர் தலைமையில் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
X

ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

வந்தவாசியில் ஆட்சியர் தலைமையில் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப் பட்டது. இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் முன்னிலையில் ஆசிரியர்கள் மாணவர்கள் கீழ்கண்டவாறு உறுதிமொழி ஏற்றனர்.

போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன் மேலும் எனது குடும்பத்தினர்களையும், நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளைவழங்குவேன். போதை பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப் படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதைபழக்கத்தின் பயன்பாடு உற்பத்தி நுகர்வு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களைதமிழ் நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன்பங்காற்று வேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் ஞானப் பிரகாசம், டிஎஸ்பி கங்காதரன், நகர்மன்ற தலைவர் ஜலால்,நகர திமுக செயலாளர் தயாளன்,நகர்மன்ற உறுப்பினர்கள் நாகூர்மீரான், கிஷோர் குமார், ஒன்றிய குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார கல்வி அலுவலர்கள் ,கிராம நிர்வாக அலுவலர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், வட்டார மருத்துவ அலுவலர்கள் ,ஆசிரியர்கள், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கார்த்திக், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மதன் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன், ஒன்றிய திமுக செயலாளர்கள் ஆனந்தன், வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தன், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself