வந்தவாசியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

வந்தவாசியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
X

வந்தவாசியில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து  விழிப்புணர்வு சைக்கிள்  பேரணி நடைபெற்றது.

வந்தவாசியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

வந்தவாசி நகராட்சி மற்றும், வந்தவாசி ரோட்டரி சங்கம், அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

அப்போது பேரணியில் நகர மன்ற தலைவர் நகராட்சி ஆணையாளர் நகர மன்ற உறுப்பினர்கள், வந்தவாசி ரோட்டரி சங்க நிர்வாகிகள், அரசு பள்ளி மாணவ மாணவிகள் சைக்கிள்களில் ஊர்வலமாக விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.

இதையடுத்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியானது வந்தவாசி தேரடி பகுதியில் இருந்து தொடங்கி காந்தி சாலை பிராமினர் தெரு, பழைய பஸ் நிலையம், பஜார் சாலை வழியாக முடிவடைந்தது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!