ஏரியில் மீன் பிடிப்பதை தடுத்ததால் ஆவேசம்: சாலையில் கற்களை போட்டு மக்கள் மறியல்

வந்தவாசி அருகே ஏரியில் மீன் பிடிப்பதை தடுத்ததை கண்டித்து கிராம மக்கள் ஆவேசமடைந்து சாலையில் கற்களை போட்டு கிராம மக்கள் மறியல் போராட்டம்.
Road Block Today - திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை மருதாடு மற்றும் கடைசிகுளம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலையில் கடைசிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடைசிகுளம் கிராமத்தினரை மீன் பிடிக்கக் கூடாது என்று தடுத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து கடைசிகுளம் கிராம மக்கள் மேல்மருதூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மருதாடு ஏரியில் மீன் பிடிக்க தங்களுக்கும் உரிமை உள்ளதாக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும் கற்கள், கம்புகளை சாலையில் போட்டு போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர்.
இதுதொடர்பாக, தகவலறிந்து அங்கு வந்த கீழ்கொடுங்காலூர் வடக்கு காவல்துறையினர் மற்றும் துணை கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா மற்றும் ஆய்வாளர் குமார் சமரசம் செய்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu