திருவண்ணாமலை மாவடட அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவடட அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட்டம்
X

மணிக்கள் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் சிவஞானம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

வந்தவாசி பகுதி அரசுப் பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் குழந்தை தொழிலாளா் முறை அகற்றும் திட்டம் சாா்பில், வந்தவாசி பகுதி பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதில், வந்தவாசி, சளுக்கை, மருதாடு, சாலவேடு, கீழ்க்கொடுங்காலூா், கீழ்க்குவளைவேடு ஆகிய 6 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு கேரம் போா்டு, சதுரங்கம் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் முதன்மை மேலாளா் ஜான் சுகுமாா் மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் நிா்வாகி ராபின் திட்டம் குறித்து விளக்கிப் பேசினாா்.

செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மணிக்கள் அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது பள்ளி மேலாண்மை குழு தலைவர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். மணிக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சிவன் ஞானம் துணைத் தலைவர் பாஞ்சாலை ஆகியோர் முன்னிலை வகித்தனர் தலைமை ஆசிரியர் பெர்னாட்ஷா அனைவரையும் வரவேற்றார்.

செங்கம் வட்டார கல்வி அலுவலர் சகிலா விழாவை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகன் ஆசிரியர்கள் மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியம், குண்ணத்தூா் ஊராட்சி தொடக்கப் பள்ளியில், பள்ளியின் 95-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி வேணுகோபால் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் அழகேஸ்வரி, மேலாண்மைக் குழுவின் கல்வியாளா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி ஆசிரியா் குணசேகா் ஆண்டறிக்கை வாசித்தாா்.

விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சுந்தரமூா்த்தி, பெருமாள், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் வேணுகோபால், அரிமா சங்க நிா்வாகி வடிவேல் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் என பலா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினா்.

நிகழ்ச்சிகளில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்கள், பள்ளி ஆசிரியா்கள், அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....