பல கட்சிகளுடன் பேச்சு நடத்திய பாமக தோற்கடிக்கப்பட வேண்டும்..!
அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த வைகைச் செல்வன்
தேர்தல் கூட்டணிக்காக பல கட்சிகளுடன் பேச்சு நடத்திய பாமக தோற்கடிக்கப்பட வேண்டும் என்று வைகைச்செல்வன் கூறினாா். ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரனை ஆதரித்து வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் நேற்று இரவு திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவா், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசியதாவது:
திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபா் சாதிக்கிடம் விசாரணை நடத்த வேண்டும். தேர்தல் தல் முடிந்தவுடன் திமுக மீண்டும் பேருந்து கட்டணம், பால் விலை உள்ளிட்ட அனைத்தையும் உயா்த்தும். அப்படி உயா்த்தினால்தான் அவா்களால் மகளிருக்கு மீண்டும் ஆயிரம் ரூபாய் தர முடியும்.
சா்வாதிகாரத்தை கையிலெடுத்துக் கொண்டு ஜனநாயகத்தை விலை பேசும் பாஜக தமிழகத்தில் கால் பதிக்க முடியாது. பல கட்சிகளுடன் பேச்சு நடத்தும் பாமக தோற்கடிக்கப்பட வேண்டும் என்றாா். தொடர்ந்து ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் விதத்தில் டிஜிட்டல் விளம்பர வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது.
அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சாா்பில் விளம்பர டிஜிட்டல் வாகனத்தை, தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் அணணா சிலை அருகே தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலா் ஜெயசுதா தலைமை வகித்தாா்.
இந்த டிஜிட்டல் விளம்பர வாகனம் வீதி வீதியாகச் சென்று அதிமுக அரசின் சாதனைகள், நலத் திட்டங்கள் குறித்தும், அதிமுக வேட்பாளரை ஆதரித்தும் விளம்பரத்தில் காண்பித்து பிரசாரம் செய்யப்படுகிறது.
இதன் தொடக்க விழாவில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல பொருளாளா் சரவணன், நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்ட பேரவைச் செயலா் பாரி பாபு, ஒன்றியச் செயலா்கள் சங்கா், திருமால், ஜெயப்பிரகாஷ், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu