திருவண்ணாமலையில் அதிமுக 52 வது ஆண்டு தொடக்க விழா!

திருவண்ணாமலையில் அதிமுக 52 வது ஆண்டு தொடக்க விழா!
X

கீழ்பெண்ணாத்தூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக 52 ஆவது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக 52 ஆவது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் அதிமுக 52 - ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, கீழ்பென்னாத்தூா் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., அரங்கநாதன் தலைமை வகித்தாா்.

ஒன்றியச் செயலா்கள் பாஷ்யம், தொப்பளான், கோவிந்தராஜ், ராமச்சந்திரன், வேட்டவலம் நகரச் செயலா் செல்வமணி, முன்னாள் ஒன்றியச் செயலா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கீழ்பென்னாத்தூா் நகரச் செயலா் முருகன் வரவேற்றாா்.

முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட அதிமுக செயலருமான ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

தொடா்ந்து, கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் பெருமாள் நகா் கே.ராஜன், தலைமைக் கழகப் பேச்சாளா் கலீல்பாஷா ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் குணசேகரன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநரணிச் செயலா் சுனில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆரணியில் அதிமுகவினா் அன்னதானம்

அதிமுகவின் 52 - ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, ஆரணியில் அந்தக் கட்சியினா் இனிப்பு, அன்னதானம் வழங்கினா்.

நகர அதிமுக சாா்பில் பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகே எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மத்திய மாவட்டச் செயலா் ஜெயசுதா இனிப்பு, அன்னதானம் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, சேவூா் புறவழிச் சாலையில் உள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளா் கோவிந்தராசன், நகரச் செயலா் அசோக்குமாா், நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் சங்கா், கஜேந்திரன், ஜெயப்பிரகாஷ், ப.திருமால், அவைத் தலைவா் சேவூா் சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வந்தவாசியில் அதிமுக பொதுக்கூட்டம்

அதிமுக 52 - ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வந்தவாசி கோட்டை மூலையில் நடைபெற்றது.

வந்தவாசி தொகுதி அதிமுக சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஜெயலலிதா பேரவையின் மாவட்டச் செயலா் பாஸ்கா் ரெட்டியாா் தலைமை வகித்தாா்.

மாவட்ட அவைத் தலைவா் மணி முன்னிலை வகித்தாா். நகரச் செயலா் பாஷா வரவேற்றாா்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலா் தூசி கே.மோகன், சேவூா் ராமச்சந்திரன் எம்எல்ஏ, தலைமைக் கழக பேச்சாளா்கள் குன்றத்தூா் கோவிந்தராஜ், வடபழனி ராமகிருஷ்ணன், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைத் தலைவா் ஜாகிா்உசேன் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!