வந்தவாசியை குப்பையில்லா நகரமாக மாற்ற புதிய ஆணையர் உறுதி

வந்தவாசியை குப்பையில்லா நகரமாக மாற்ற புதிய ஆணையர்  உறுதி
X

வந்தவாசி நகராட்சி புதிய ஆணையர் ராமஜெயம்

வந்தவாசியை குப்பையில்லா நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி புதிய ஆணையர் கூறியுள்ளார்

வந்தவாசி நகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்ற ராமஜெயம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீர் தேங்காமல் இருக்க அனைத்து கழிவுநீர்க் கால்வாய்களை தூர்வாரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

நகரில் உள்ள அனைத்து தெரு விளக்குகளையும் எரிய வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் வரிகளை செலுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வரி வசூலில் சரியாக ஈடுபடாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!