திருவண்ணாமலை மாவட்டத்தில் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய ஆசிரியர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஆரியன் ஆப்டிகல்ஸ் உரிமையாளர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். உடன் ஆசிரியர்கள், மாணவர்கள் இருந்தனர்..நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அப்துல் கலாம் குறித்த வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம், செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் ஊர் புற நூலகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல் மற்றும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. நூலகப் புரவலர் குப்புராஜ், அரிமா சங்க உறுப்பினர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அரிமா சங்க மாவட்ட தலைவர் சிவானந்தம் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். அரிமா சங்க மாவட்ட சேவை தலைவர் வடிவேல் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் நூலக வாசகர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில், முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
கல்லூரியின் முதுகலை மற்றும் தமிழ் ஆய்வுத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவா் பழனி தலைமை வகித்தாா். செயலா் விஜய் ஆனந்த், பொருளாளா் ஸ்ரீதா், கல்விப்புல முதன்மையா் உடையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ஆனந்தராஜ் வரவேற்றாா். அப்துல் கலாம் படத்துக்கு கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாது இந்தியாவின் பெருமையாகத் திகழ்ந்த அப்துல்கலாம், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது உடல் சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்க்கரும்பு எனும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டது. இந்தியப் பொருளாதாரம் முன்னேற வேண்டும், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும், இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்பதை மூச்சாகக் கொண்டிருந்தார் அப்துல் கலம், என நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர்கள் நினைவுகூர்ந்தனர்.
நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வா் அண்ணாமலை, தமிழ்த் துறைத் தலைவா் சங்கா் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu