வந்தவாசி அரசு உயர்நிலைப்பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

வந்தவாசி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி தலைமை வகித்தார். கிருஷ்ணா கல்வி மையம் முதல்வர் சீனிவாசன் வரவேற்றார்.

நீங்களும் ஆகலாம் கலாம் என்ற தலைப்பில் தெள்ளார் காவல் நிலைய ஆய்வாளர் சோனியா, தெள்ளார் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் ஆகியோர் உரையாற்றினர்.

மேலும் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இவ்விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!