வந்தவாசி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி உயிரிழப்பு
X

பரிதாபமாக உயிரிழந்த  வீரமுத்து

வந்தவாசி அருகே வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது45). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கற்பகம் என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், வீரமுத்து இன்று காலை வேலைக்கு செல்லவதற்காக தனது வீட்டின் அருகில் உள்ள செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் வழியே நடந்து சென்றுள்ளார்.

அப்போது, அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது. இதனை கவனிக்காத வீரமுத்து, எதிர்பாராத விதமாக மின்கம்பியை மிதித்துள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கியதில் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கிராமத்தினர் வந்தவாசி பொன்னூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீரமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!