வந்தவாசியில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த வியாபாரி கைது

வந்தவாசியில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த வியாபாரி கைது
X

பைல் படம்

வந்தவாசியில் ரூ.2½ லட்சம் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபரை மடக்கி சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பைக்கில் வந்தவர் சென்னாவரம் கிராமம் விஜயலட்சுமி நகரைச்சேர்ந்த மணிகண்டபிரபு (வயது 34), வியாபாரி என்பது தெரியவந்தது.

பின்னர் போலீசார் மணிகண்டபிரபுவின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் 6 மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததை கண்டு பிடித்தனர்.

இதையடுத்து போதை பொருட்களையும், மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டபிரபுவை கைது செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்